பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபைக்குழுவில் இடம்பிடித்து இந்தியப்பெண் சாதனை!!!

  • IndiaGlitz, [Wednesday,July 29 2020]

 

உலகம் முழுவதும் பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் குறித்து ஆலோசனை வழங்கும் வகையில் ஐ.நா. சபை புதிய குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பல்வேறு நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இணைத்து உருவாக்கியிருக்கும் இந்தக் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சனா சோரம் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் இடம்பிடித்து உள்ளார் என்பது இந்தியாவிற்கு பெருமைச் சேர்க்கும் விடயமாகப் பார்க்கப்படுகிறது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் வசித்து வரும் அர்ச்சனா சோரம் பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரியில் பொலிட்டிகல் சையின்ஸ் பட்டத்தைப் பெற்ற இவர் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்ட்டியூட்டில் முதுகலை பொலிட்டிகல் சையின்ஸ் பட்டத்தையும் முடித்து இருக்கிறார். இந்நிறுவனத்தின் சார்பாக ஒடிசா பகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

ஜுலை 27 ஆம் தேதி ஐ.நா. சபைக்கான பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியாவின் சார்பாக அர்ச்சனா சோரம் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு மனிதனுக்கு 2 முறை கொரோனா வருமா??? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞான உலகம் நம்பிக் கொண்டிருந்தது

4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி: ஜெயலலிதா வீட்டில் உள்ள பொருட்களின் பட்டியல்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா எல்லாம்' என்ற வீட்டை அரசுடமையாக்க சமீபத்தில் தமிழக அரசு முடிவு செய்தது என்பதும் இதற்காக ரூபாய் 60 கோடியை தமிழக அரசு செலுத்தி விட்டதாகவும்

முதல் முறையாக 'பான்-இந்தியா' திரைப்படமாகும் அஜித் படம்: பரபரப்பு தகவல் 

தற்போது பல பிரபல நடிகர்களின் படங்கள் 'பான்-இந்தியா' திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. பல மொழிகளில் ஒரே நேரத்தில் திரையிட்டால் வசூலை குவிக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான்

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, முந்திக்கொண்டு மனைவியை கொலை செய்த கணவன்!

கணவன் தூங்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டிய மனைவியை முந்திக்கொண்ட கணவர், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சாப்ட்வேர் வேலை பறிபோய் காய்கறி விற்ற இளம்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்!

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல ஏழை எளிய மக்களுக்கு திரையில் வில்லனாகவும் நிஜத்தில் ஹீரோவகவும் இருந்து வரும் நடிகர் சோனுசூட் உதவி செய்து வருகிறார்