பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபைக்குழுவில் இடம்பிடித்து இந்தியப்பெண் சாதனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் குறித்து ஆலோசனை வழங்கும் வகையில் ஐ.நா. சபை புதிய குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பல்வேறு நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இணைத்து உருவாக்கியிருக்கும் இந்தக் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சனா சோரம் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் இடம்பிடித்து உள்ளார் என்பது இந்தியாவிற்கு பெருமைச் சேர்க்கும் விடயமாகப் பார்க்கப்படுகிறது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் வசித்து வரும் அர்ச்சனா சோரம் பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரியில் பொலிட்டிகல் சையின்ஸ் பட்டத்தைப் பெற்ற இவர் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்ட்டியூட்டில் முதுகலை பொலிட்டிகல் சையின்ஸ் பட்டத்தையும் முடித்து இருக்கிறார். இந்நிறுவனத்தின் சார்பாக ஒடிசா பகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ஜுலை 27 ஆம் தேதி ஐ.நா. சபைக்கான பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியாவின் சார்பாக அர்ச்சனா சோரம் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com