விக்ரமின் 'சாமி 2': மீண்டும் போலீஸ் கேரக்டரில் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,December 22 2017]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க உமா ரியாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உமா ரியாஸ் ஏற்கனவே அருள்நிதியின் 'மெளனகுரு' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கணவர் ரியாஸ்கானுடன் 'சென்னை விடுதி' என்ற படத்திலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். பெண் போலீஸ் கேரக்டர் என்றாலே ஒரு காலத்தில் விஜயசாந்தி பெயர் தான் ஞாபகம். அதேபோல் உமாரியாஸ் தொடர்ந்து பெண் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்.