'அட்டக்கத்தி' ஜோடியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தினேஷ், நந்திதா நடிப்பில் உருவாகிய 'உள்குத்து' திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் நடித்த 'திருடன்' பட இயக்குனர் கார்த்திக் ராஜூ மீண்டும் தினேஷுடன் இணைந்த படம் தான் 'உள்குத்து.' அட்டக்கத்தி' படத்திற்கு பின்னர் நந்திதா ஈண்டும் தினேஷூடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் இது. இந்த படத்தை பிகே பிலிம் பேக்டரி ஜி. விட்டல் குமார் அவர்களும் G சுபாஷினி தேவி அவர்களும் தயாரித்துள்ளனர்.
இது குறித்து திரு. G விட்டல் குமார் பேசுகையில், '' தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படைகள் இதற்கு சான்று. இந்த நிலையில் 'உள்குத்து' படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம். இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்கள் 'உள்குத்து' படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com