'விஸ்வரூபம் 2' படத்தின் துருக்கி வதந்திக்கு படக்குழு விளக்கம்.
- IndiaGlitz, [Tuesday,June 20 2017]
உலக நாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துருக்கியில் நடைபெறவுள்ளதாகவும், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் துருக்கி செல்லவுள்ளதாகவும் இணையதளங்களில் நேற்று முதல் செய்தி வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் 'விஸ்வரூபம் 2' படக்குழுவினர்களில் ஒருவரும் 'தூங்காவனம்' படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி தற்போது படுவேகத்துடன் நடைபெற்று வருகிறது. இன்னும் சுமார் 10% பணிகள் மட்டுமே மீதமுள்ளது. படப்பிடிப்பை பொருத்தவரையில் வெகுசில காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. இந்த நிலையில் துருக்கியில் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகின்றன' என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கி வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.