ரஜினி-கமல் இணைந்து பார்க்கும் பிரபல ஹீரோவின் படம்?

  • IndiaGlitz, [Wednesday,March 08 2017]

'சதுரங்க வேட்டை' என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. ராமு செல்லப்பா இயக்கியுள்ள இந்த படம் மார்ச் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தபோது நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு தகவலை வெளியிட்டார். 'எங்கிட்டே மோதாதே' திரைப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் நடிகர்களுக்கு கட்-அவுட் வைக்கும் கலாச்சாரம் குறித்த கதை என்றும் கூறினார்
இந்த படத்தில் நடித்திருக்கும் தன்னுடைய கேரக்டர் ரஜினிக்கு கட்-அவுட் வைப்பது போலவும், தன்னுடைய சக நடிகர் ராஜாஜி கமல்ஹாசனுக்கு கட்-அவுட் வைப்பது போலவும் காட்சிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் வசதியான தேதி ஒன்றில் அந்த சிறப்பு காட்சி இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
நட்டி நட்ராஜ், ராஜாஜி, பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார்.

More News

40 வருடங்களுக்கு முந்தைய மருத்துவமனையில் விஜய்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மற்றொரு முன்னணி நடிகையின் சமூகவலைதளம் ஹேக்?

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் செய்யப்படும் பதிவுகளால் கோலிவுட் பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பர பிரியரா ராகவா லாரன்ஸ்?

பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் பலருக்கு ஆதரவு கொடுத்து அவர்களுக்கு கல்வி, உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே

தமிழ் சினிமாவில் பெண்கள்! மார்ச் 8- மகளிர் தின சிறப்பு கட்டுரை

பொதுவாக திரைத்துறை என்றால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே கருதப்படுகிறது. இந்த துறையில் ஒரு காலத்தில் பெண்கள் நடிகையாக மட்டுமே இருந்துள்ளனர். மிகவும் அபூர்வமாக ஒருசிலரே நடிப்பு தவிர மற்ற துறைகளை தேர்வு செய்து வந்தார்கள். ஆனால் தற்போது நடிப்பு மட்டுமின்றி இயக்கம், ஒளிப்பதிவு, மேக்கப், நடன இயக்குனர், பாடலாசிரியர், இசை

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படத்தில் சிங்கப்பூர் வில்லன்

ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவான 'மிருதன்' படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. 'மிருதன்' திரைப்படம் தமிழின் முதல் ஜாம்பி படமாக இருந்த் நிலையில் இந்த படம் விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் தமிழ் படமாக உருவாகி வருகிறது...