சட்டத்தை யாரும் அவமானம் செய்ய வேண்டாம்: கமல் வேண்டுகோள்.
- IndiaGlitz, [Saturday,September 09 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கருத்துக்களை ஆக்கபூர்வமாக தெரிவித்து வரும் நிலையில் நீட் பிரச்சனை குறித்தும், அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது குறித்து நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தது. போராடுவது என்பது அனைவரது அடிப்படை உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பில்லாமல் அமைதியான முறையில் போராடலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்றத்தை கொண்டுவரமுடியும். வாருங்கள் விவாதிக்கலாம்” என்று கூறியுள்ளார். கமலின் இந்த கருத்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.