ஓட்டுப் போட காசு வாங்குபவர்களுக்கு இப்படித்தான் தலைவன் வருவான். கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் பிக்பாஸ், இன்றைய சினிமா, சினிமா வியாபாரம், டெக்னாலஜி ஆகியவை குறித்து பேசிய கமல், அரசியல் குறித்து கூறும்போது மக்களையே அவர் குறைகூறியுள்ளார்.
அவர் இந்த பேட்டியில், 'ஊழல், மக்களிடமிருந்து ஆரம்பிப்பதால்தான் அவர்கள் அரசியல்வாதிகளை எதிர்க்க தயங்கி நிற்கிறார்கள். ஏதோ ஒரு பெயரைச் சொல்லி, ஓர் அரசியல்வாதியைச் சுட்டிக்காட்டி இவர்தான் காரணம், அவர்தான் காரணம்` எனச் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் என்ன செய்தேன்? என்னளவில் நான் சரியாக இருந்தால் போதுமா?
ஓட்டுப் போட நான் காசு வாங்கவில்லை. அதனால் ஊர் திருந்திவிடுமா? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இருந்தவர்களில் எத்தனை பேர் ஓட்டுப் போடும்போது காசு வாங்காதவர்கள்? ஓட்டுப் போட காசு வாங்குபவர்களுக்கு இப்படித்தான் தலைவன் வருவான். இவர்கள், அழுது ஓலமிடுவதற்கான அருகதையை இழந்தவர்கள்' என்று காட்டமாக கருத்து கூறியுள்ளார்.
மேலும் தான் நடத்த இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் குறிப்பிடும்போது, 'முன்னாபாய்` என்ற இந்திப் படத்தின் ரீமேக் தான்வசூல்ராஜா எம்பிபிஎஸ். ஆனல் இரண்டு படங்களும் வெவ்வேறு படங்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ரீமேக் செய்வது என்பது எனக்கு ராமாயணம் எழுதுவது மாதிரி. ராமாயணத்தை எழுதினால்கூட அதில் கம்பனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை` என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout