ஜல்லிக்கட்டு, நெடுவாசலை அடுத்து கமல்ஹாசனின் அடுத்த குரல்
- IndiaGlitz, [Friday,June 23 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் திரைத்துறையில் தொடர்ந்து சாதனை செய்வது மட்டுமின்றி அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் தைரியமாக குரல் கொடுத்து வருபவர் என்பதும், அவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கும் குணம் படைத்தவர் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம் ஆகியவற்றுக்கு தனது டுவிட்டரில் காரசாரமான டுவீட் போட்டு ஆதரவு கொடுத்தவர் கமல். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கீழடி அகழ்வாய்வு குறித்த பிரச்சனை நடந்து வரும் நிலையில் தற்போது அதற்கும் குரல் கொடுத்துள்ளார்.
கீழடி அகழ்வாய்வு குறித்த கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கதிற்கு சுப. வீரப்பாண்டியன் தலைமை வகித்தார். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியதாவது: தோழர் சு.ப. வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இதுவரை கீழடி ஆராய்ச்சியில் கிடைத்த பழமையான பொருட்களை வைக்கும் அருங்காட்சியகத்திற்கு இடம் கொடுக்க மறுத்த தமிழக அரசு, இன்று இடம் கொடுக்க ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் சு.ப. வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2017