கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். போலீஸ் புகார் செய்த அரசியல் கட்சி
Monday, February 20, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது
அந்த புகாரில் மேலும் கூறியிருப்பதாவது:
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் "People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home" என்ற வாசகங்கள் கொண்ட கருத்தை வெளியிட்டிருகிறார். கமல்ஹாசன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களை வன்முறையில் தூண்டும்விதமாக இக்கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய நடிகர் கமல்ஹாசன் என்பதால் மக்கள் இவரின் கருத்தை தவறான முறையில் விளங்கி, வன்முறைக்கு அழைத்து செல்லும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தான் விரும்பிய அரசு அமையவில்லை என்பதால் வன்முறைக்கு மக்களை தூண்டுவது சட்டப்படி குற்றம். நடிகர் கமல்ஹாசன் அவர்களின் டிவிட்டர் சமூகவலைத்தள பதிவு இளைஞர்கள் முதல் ஊடகங்கள் வரை பெரும் அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை பயன்படுத்தி தொகுதிமக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் சட்டமன்ற உறுப்பினர்களை தாக்குதல் நடத்தினால் அதற்கு நடிகர் கமல்ஹாசன் தான் பொறுப்பேற்க வேண்டும். வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த கமல்ஹாசன் அவர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்' இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் கருத்து வன்முறையை தூண்டியதா? அல்லது விழிப்புணர்ச்சியை தூண்டியதா? என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறான நிலையில் தமிழக காவல்துறை இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments