கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். போலீஸ் புகார் செய்த அரசியல் கட்சி

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது
அந்த புகாரில் மேலும் கூறியிருப்பதாவது:
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் "People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home" என்ற வாசகங்கள் கொண்ட கருத்தை வெளியிட்டிருகிறார். கமல்ஹாசன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களை வன்முறையில் தூண்டும்விதமாக இக்கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய நடிகர் கமல்ஹாசன் என்பதால் மக்கள் இவரின் கருத்தை தவறான முறையில் விளங்கி, வன்முறைக்கு அழைத்து செல்லும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தான் விரும்பிய அரசு அமையவில்லை என்பதால் வன்முறைக்கு மக்களை தூண்டுவது சட்டப்படி குற்றம். நடிகர் கமல்ஹாசன் அவர்களின் டிவிட்டர் சமூகவலைத்தள பதிவு இளைஞர்கள் முதல் ஊடகங்கள் வரை பெரும் அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை பயன்படுத்தி தொகுதிமக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் சட்டமன்ற உறுப்பினர்களை தாக்குதல் நடத்தினால் அதற்கு நடிகர் கமல்ஹாசன் தான் பொறுப்பேற்க வேண்டும். வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த கமல்ஹாசன் அவர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்' இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் கருத்து வன்முறையை தூண்டியதா? அல்லது விழிப்புணர்ச்சியை தூண்டியதா? என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறான நிலையில் தமிழக காவல்துறை இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'. ஃபர்ஸ்ட்லுக், ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'வேலைக்காரன்' என சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சசிகலா தியாகி, ஓபிஎஸ் துரோகியா? விஜயசாந்திக்கு கடும் கண்டனம்

தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக கேலிக்கூத்து அனைவரும் அறிந்ததே.

ஐபிஎல் வீரர்கள் ஏலம். ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்.

10வது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் எட்டு அணிகள் மோதுகின்றன.

மேலும் 500 மதுக்கடைகள் மூடல். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் உத்தரவு

தமிழக முதல்வராக கடந்த வாரம் பதவியேற்று சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சற்று முன்னர் தலைமைச்செயலகம் வந்தார்.

பாவனா விவகாரம்: கேரள முதல்வருக்கு நடிகர் விஷால் எழுதிய அவசர கடிதம்

நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது நடந்த அசம்பாவித சம்பவத்தால் கேரள திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.