close
Choose your channels

உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தில் 'விக்ரம்' டிரைலர்: கமல் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முதல் நாளுக்குரிய அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்பனை ஆகி விட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் இதுவரை இல்லாத அளவில் ‘விக்ரம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து வருகிறார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் பயணம் செய்து புரமோஷன் செய்துவரும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

அந்த வகையில் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடத்தில் ‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியானது. இதனை நேரில் பார்க்க கமல்ஹாசன் துபாய் சென்று இருந்தார். புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ‘விக்ரம்’ டிரைலர் வெளியான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அட்டகாசமான இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன், காயத்ரி ஷங்கர், ஷிவானி நாராயணன், ஷான்வி ஸ்ரீவத்சவா, ஜி மாரிமுத்து, ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment