close
Choose your channels

கமல்ஹாசன் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Friday, January 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ’கல்கி 2898 ’ ஆகிய இரண்டு படங்களில் கமல்ஹாசன் நடித்து முடித்துவிட்டார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசன் வில்லனாக நடித்த ’கல்கி 2898’ என்ற படம் இந்த ஆண்டு மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் வித்தியாசமான வில்லன் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment