கமல்ஹாசன் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,January 12 2024]

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ’கல்கி 2898 ’ ஆகிய இரண்டு படங்களில் கமல்ஹாசன் நடித்து முடித்துவிட்டார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசன் வில்லனாக நடித்த ’கல்கி 2898’ என்ற படம் இந்த ஆண்டு மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் வித்தியாசமான வில்லன் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது,

More News

சாரி கேட்ட நிக்சன்.. சாரியெல்லாம் செல்லாது என முகத்தில் அடித்தது போல் சொன்ன வினுஷா..!

வினுஷா குறித்து நிக்சன் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இன்றைய அடுத்த புரோமாவில் வினுஷாவிடம் அவர் சாரி கேட்டார். ஆனால் அந்த சாரி எல்லாம் செல்லாது எ

விஜய் டிவி ரக்சனுக்கு இவ்வளவு பெரிய மகளா? பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

குக் வித் கோமாளி உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ரக்சன் தனது மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து

வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் பின் ஒரு வலி இருக்கும்: 'அயலான்' குறித்து சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் இன்று பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

அந்த ஒரே ஒரு சம்பவம்.. பிரதீப்பை நம்ப வைத்து கழுத்தறுத்த மாயா.. துரோக வீடியோ வைரல்..!

பிக்பாஸ் 7வது சீசனில் பிரதீப் ஆபத்தானவர் என்று முதலிலேயே கண்டுபிடித்த மாயா அவரை நம்ப வைத்து கழுத்தறுத்து, அவருக்கு துரோகம் செய்து, நயவஞ்சமாக வெளியேற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'தக்ஃலைப்' படத்தில் இணைந்து வரும் 'பொன்னியின் செல்வன்' நட்சத்திரங்கள்.. இன்னும் யார் யார்?

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான 'தக்ஃலைப்' படத்திலும் இணைந்து வருகின்றனர்