இன்று முடிவு தெரிந்துவிடும்… பீதியில் உக்ரைன் அதிபர் வெளியிட்ட வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
முன்னதாக ரஷ்யா தன்னை முதலாவது எதிரியாக கருதுவதாகவும் இரண்டாவது எதிரியாகத் தனது குடும்பத்தை கருதுவதாகவும் ஜெலன்ஸ்கி அச்சம் தெரிவித்து இருந்தார். மேலும் நான் வேறெங்கும் செல்லப் போவதில்லை என்பதையும் தனது நாட்டு குடிமக்களுக்கு உறுதிப்பட கூறியிருந்தார்.
இதையடுத்து இந்தியா உக்ரைன் விவகாரத்தில் உதவ வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரே மணிநேரத்திற்கு பிறகு நேற்றுமுன்தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். தொலைபேசியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்தியர்கள் தயாகம் திரும்புவது குறித்தும் உக்ரைன் விவகாரத்திற்கு பேச்சுவார்த்தையின் மூலம் முடிவு எட்டப்படுவதைக் குறித்தும் பேசியதாக அறிக்கை வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதலே உக்ரைனில் போர் மேகங்கள் சூழ ஆரம்பித்துவிட்டன. இதையடுத்து “நேட்டா“ தனது படைகளை ஏன் உக்ரைன் நாட்டிற்குள் அனுப்பவில்லை என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்சி தனித்துவிடப்பட்டதைப் போல உணருகிறேன் என்று உருக்கமாக வீடியோவில் பேசியிருந்தார்.
இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சு வார்த்தையில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்துதல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பென்டகன் பகுதியில் இருக்கும் அமெரிக்க இராணுவம் உக்ரைனுக்கு எந்த வகையில் உதவலாம் என்று ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனின் கதி என்ன என்பது இன்று தெரிந்துவிடும் என்று ரகசிய இடத்தில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். நேட்டாவில் இணைந்து கொள்வதற்கு முயற்சி செய்ததற்காக ரஷ்யா தற்போது தனது படைகளை உக்ரைனில் குவித்திருக்கிறது. ஆனால நேட்டாவில் முறைப்படி இணையாமல் இருக்கும் உக்ரைனுக்கு உலகநாடுகள் எப்படி உதவ முடியும்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்சி தனது தலைநகரான க்வ்- இல் உள்ள பொதுமக்களின் கைகளில் 18 ஆயிரம் இராணுவத் துப்பாக்கிகளைக் கொடுத்ததோடு பெட்ரோல் எரிக்குண்டுகளை எப்படி தயாரிப்பது என்பது போன்ற வீடியோக்களையும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை தங்களது பொதுமக்களிடையே பரப்பி இருக்கிறது. மேலும் க்வ்- நகருக்குள் நுழையும் ரஷ்யப் படைகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் உக்ரைனுக்குள் ஆக்கிரமிப்புகளை ஆரம்பித்துவிட்ட ரஷ்ய இராணுவம் அந்நாட்டின் விமான நிலையங்கள் இராணுவத் தளவாடங்கள் போன்றவற்றை அழித்து நொறுக்கிய நிலையில் இன்று தலைநகர் க்யூ மீது தாக்குதல் தொடுக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் உக்ரைன் நாட்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்துக்கொள்ளும்படி ரஷ்ய அதிபர் புடின் தற்போது உக்ரைன் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ராணுவத்தின் வசம் நிர்வாகம் வரும்போது சமரசமான ஒரு முடிவுக்கு வர முடியும். நாஜிக்கள் மற்றும் அடிப்படை வாதிகளுக்கு ஆதரவாக உங்களது குழந்தைகளை ஆயுதம் ஏந்த வைக்காதீர்கள் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
"The president is here." President Volodymyr Zelensky of Ukraine posted a video on social media showing him standing alongside other government officials, saying that the country’s leaders had not fled Kyiv as Russian forces entered the city. https://t.co/VPxc01QGAG pic.twitter.com/F91xlEp7we
— The New York Times (@nytimes) February 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com