உக்ரைனில் இருக்கும் 20,000 இந்தியர்களின் கதி என்ன?
- IndiaGlitz, [Saturday,February 19 2022]
போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் உக்ரைன் நாட்டில் மாணவர்கள், தொழிலாளர்கள் என இந்தியாவைச் சேர்ந்த 20,000 பேர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கிழக்கு உக்ரைன் பகுதியில் ஷெல் குண்டுவீச்சு தாக்குதல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைனைத் தாக்கலாம் எனும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து போர் பதற்றம் நீடித்துள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்திய விமான நிறுவனம் 3 விமானங்களை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பாரத் மிஷன் (VBM) எனப்படும் இந்த விமானம் வரும் 22, 24, 26 ஆகிய தேதிகளில் பதற்றமான பகுதிகளில் இருந்த இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை போன்றே அமெரிக்கா, ஐரோரோப்பிய நாடுகள், சீனா என அனைத்து நாடுகளும் உக்ரைன் நாட்டில் தங்கியிருக்கும் தம் நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றர். பொதுமக்களை மீட்பது மட்டுமே தற்போது இந்தியாவிற்குள்ள நேரடியான கவலையாக இதுக்கிறது. இதைத்தவிர உக்ரைன் போர்ப் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு அரசியல் ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படலாம எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றகர்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 50% க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தளவாடங்களை வாங்கியிருக்கிறது. மேலும் இந்திய விமானப்படையில் உள்ள ஜெட் விமானங்கள் உட்பட 71% பொருட்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவையே. ஏவுகணை தொழில்நுட்பத்திற்கும் இந்தியா ரஷ்யாவையே சார்ந்திருக்கிறது. இப்படி பெருமளவு பாதுகாப்பு, இராணுவம் சம்பந்தமான துறைகளில் ரஷ்யாவை சார்ந்திருக்கும் இந்தியாவிற்கு இதையே காரணமாக வைத்துக்கொண்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
காரணம் உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தொடுக்கும்போது அதை எதிர்த்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூட்டிணைந்து செயல்பட்டால் ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்களை வாங்கிய நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் பட்சத்தில் இது இந்தியாவிற்கு பாதிப்பாக முடியலாம்.
இதைத்தவிர சீனா விஷயத்தில் நமக்கு அமெரிக்காவின் துணை தேவைப்படுகிறது. காரணம் ரஷ்யாவை ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றவை எதிர்க்கும்போது சீனா இயல்பாகவே ரஷ்யாவை ஆதரிக்க ஆரம்பித்துவிடும். இப்படி செய்யும்போது ஏற்கனவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பாதுகாப்பு எல்லை விஷயத்தில் கடும் சிக்கல் இருந்துவரும் நிலையில் இந்தியாவிற்கு கடும் ஆபத்தாக முடிந்துவிடும்.
மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை எதிர்க்கும் விதமாக ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கூட்டிணைந்து Quad அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படியிருக்கும்போது ரஷ்யாவிற்கு ஆதரவாக இந்தியா கருத்துத் தெரிவிக்க முடியாது. ஒருவேளை ரஷ்யாவிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தால் சீனா சம்பந்தமான பிரச்சனை சமாளிக்க நேரிடும் என்ற வகையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை எனப் பல்வேறு முனைகளில் இருந்து சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
#FlyAI : Air India is operating 3 flights between India & Ukraine on 22nd, 24th & 26th FEB 2022 .
— Air India (@airindiain) February 19, 2022
Seats are available on these flights.
Booking open through Air India Booking offices, Website, Call Centre and Authorised Travel Agents.@IndiainUkraine pic.twitter.com/jKW5InGCOR