பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் உக்ரைன் விவகாரம்… ஆபத்தில் முடியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உக்ரைன் நேட்டா அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா இன்று அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. இதனால் உக்ரைன் தலைநகர் க்யூ மற்றும் அதன் கிழக்கு பிராந்தியங்களில் குண்டுமழை பொழிகின்றன. இதனால் உலக நாடுகளுக்கிடையே 3 ஆம் உலகப்போர் மூழுமோ? என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இதனால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் எக்ஸ்சேஞ்ச் எனப்படும் பங்கு சந்தை வர்த்தகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. காரணம் அமெரிக்கா டாலுக்கு நிகரான ரூபிள் மதிப்பு படு மோசமாக குறைந்து இருக்கிறது. காரணம் உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்க, ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. மேலும் பணப்பரிவர்த்தனைக்கு உதவியாக இருக்கும் ஸ்விஃப்ட் முறையையும் தடை செய்துள்ளது.
ரஷ்யாவில் மட்டுமல்ல உக்ரைன் விவகாரத்தால் உலகப் பொருளாதாரம் முழுக்கவே பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் நேற்றிலிருந்து கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக உக்ரைன் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் நோட்டா நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க தவறிவிட்டன என்றும் கூறியிருந்தார். இதனால்தான் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையைத் துவங்கியிருப்பதாகவும் அந்நாட்டை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார்.
மேலும் உக்ரைனில் தற்போது இராணுவ ஆதிக்கம் அதிகரித்து இருப்பதாகவும் அதிலிருந்து அந்த நாட்டை விடுவித்து குற்றவாளிகளுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுத்தர இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வரலாற்றில் காணத அளவிற்கு பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் நேட்டாவில் இருக்கும் உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டிவருகின்றன. இதற்கு மாறாக ரஷ்யா ஒட்டுமொத்த கூட்டணி நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 3 ஆம் உலகப்போருக்கான அறிகுறியா இது என்றும் அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments