கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பிரிட்டன் பிரதமர்!!!
- IndiaGlitz, [Monday,April 06 2020]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அந்நாட்டு செய்தி நிறுவனமான டவுனிங் ஸ்ட்ரிட் உறுதிப்படுத்தியிருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டநிலையில் அவருக்கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உடல் வெப்பநிலை அதிகமாகியிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும், அந்நாட்டு செய்தி நிறுவனமொன்று, கொரோனாவின் அடுத்தக்கட்ட பரிசோதனைக்காக லண்டன் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பிரதமரின் மருத்துவ ஆலோசகரின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு வெளியுறவு செயலாளர் இன்று ஒரு ஆலோசனை கூட்டத்தை தலைமையேற்று நடத்தவுள்ளார். மேலும் இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் கொரோனா தொற்றுடன் போராடி மீண்டு வரவேண்டும், அமெரிக்க மக்கள் அவர் உடல்நிலை தேறிவருவதற்காக இறைவனை வேண்டுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.