66 வயது நபருக்கு 129 குழந்தைகளா? வசவுக்குப் பதிலாக பாராட்டைக் குவித்துவரும் சம்பவம்!
- IndiaGlitz, [Saturday,January 29 2022]
பிரிட்டனைச் சேர்ந்த 66 வயதான நபர் ஒருவர் 129 குழந்தைகளுக்குத் தந்தையாகி இருக்கிறார். மேலும் இவருக்கு 9 குழந்தைகள் பிறக்க இருக்கும் நிலையில் இவருடைய செயல் பலரது மத்தியில் பாராட்டைக் குவித்து வருகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தை என்பதை ஒரு வரமாகத்தான் பொதுமக்கள் கருதி வருகின்றனர். ஒருவேளை இந்த வரம் கிடைக்காத தம்பதிகள் சமூகத்தின் மத்தியில் சில அவமானங்களை சந்திக்கவும் நேரிடுகிறது. இத்தகைய நபர்களுக்கு மருத்துவம் கொடுத்திருக்கும் ஒரு அரிய மருந்துதான் செயற்கை கருவூட்டல். குழந்தை பிறக்க வழியில்லாத தம்பதிகள் மற்றவர்களிடம் விந்தணுக்களை கடன் வாங்கி கருவுறும் முறை சமீபத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு சில ஆர்வலர்கள் இலவசமாகவும் தங்களது விந்தணுக்களை தானம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரிட்டனில் வசித்துவரும் சில்வி ஜோன்ஸ் எனும் 66 வயதான நபர் இதுவரை தன்னடைய விந்தணுவை தானம் கொடுத்து 129 தம்பதிகளுக்கு உதவியிருக்கிறார். மேலும் 9 தம்பதிகளுக்கு இவர் தானம் கொடுத்திருக்கும் நிலையில் அவர்கள் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக 138 குழந்தைகளின் பிறப்புக்கு உதவியிருக்கும் சில்வி 150 குழந்தைகளோடு தனது தானத்தை நிறுத்திக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார்.
பிரிட்டனை பொறுத்தவரை 45 வயதுடையவர்கள் மட்டுமே விந்தணுக்களைத் தானம் கொடுக்க முடியும். ஆனால் சில்வி முகநூல் வாயிலாக தேவைப்படுவோர்களை அணுகி இலவசமாக தனது விந்தணுவை கொடுத்து வருகிறார். இதனால 150 குழந்தைகளோடு தனது தானத்தை நிறுத்திக்கொள்வதுதான் சரியானது என்றும் அவர் முடிவெடுத்துள்ளார். இவரது சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.