மிக்சிங் சரியில்ல… மது அருந்தியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

இங்கிலாந்து நாட்டில் நைட் கிளப்புக்கு சென்ற இளம்பெண் ஒருவர் மது அருந்தியபோது திடீரென கைக் கால்களை இழுத்துக்கொண்டு மயங்கி விழுந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த மில்லி எனும் இளம்பெண் ஒருவர் அந்நாட்டில் உள்ள சௌத்தென்ட் எனும் நைட் கிளப்பிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து வோட்கா லெமெனேட் மது அருந்தியபோது திடீரென கை, கால்களை இழுத்துக் கொண்டு சரிந்து விழுந்த காட்சி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணிநேரங்களுக்குப் பின்னர் இயல்பு நிலைமைக்குத் திரும்பினார். இதுகுறித்து பேசிய மில்லியின் தாயார் கிளாரி, மதுவில் 2 போதை மாத்திரைகளை யாரோ கலந்து கொடுத்துள்ளனர். அதனால் மில்லிக்கு பக்கவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவம் மில்லியின் எதிர்காலத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கருத்துத் தெரிவித்த மருத்துவர்கள் மது அருந்தும்போது உடலுக்கு ஒப்புக்கொள்ளாத பொருட்களை கலந்து குடிப்பதால் இதுபோன்ற பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறித்தி உள்ளனர்.

More News

சாதி பெயரால் அவதூறு செய்தவர்களுக்கு ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா பதிலடி!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் அர்ஜென்டினாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்

தஞ்சை கோவிலில் முதன் முறையாக தமிழில் அர்ச்சனை.....!

தஞ்சை  பெருவுடையார் கோவிலில் இன்று முதன்முதலாக முறைப்படி  தமிழில் அர்ச்சனை நடைபெற்றது.

'சார்பட்டா பரம்பரை'  படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நவரசா: கார்த்திக் நரேனின் 'அக்னி'

நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒரு பகுதி அக்னி. கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய்சித்தார்த் மற்றும் பூர்ணா நடிப்பில் ரான் எதான் யோஹன் இசையில் உருவாகியுள்ளது.

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா....!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.