கவர்ச்சியாக இல்லை… மோசமான விமர்சனத்தால் ஒலிம்பிக் வீராங்கனைகள் உருக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அழகு என்பது ஒருவரின் தோற்றத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளாத சிலபேர் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களிலும் பொது இடங்களிலும் மற்றவர்களை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பிரிட்டன் சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் நீச்சல் வீராங்கனைகள் இரண்டுபேர் தாங்கள் எதிர்கொண்ட மோசமான விமர்சனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நீச்சல் விளையாட்டு வீராங்கனைகளான கேட் (19), ஷார்ட்மென் இஸ்ஸி (20) ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் விளம்பர கம்பெனி ஒன்றிற்கு இவர்கள் போஸ் கொடுத்து இருப்பதைப் பார்த்து ரசிர்கள் சிலர் “உங்களுடைய மார்பகம் பெரிதாக இல்லை“ என்றொரு மோசமான விமர்சனத்தை தெரிவித்து உள்ளனர்.
இன்னும் சிலர் உங்களுக்கு பெரிய தோள்பட்டைகள், சிறிய மார்பகம், சிறிய புட்டம் இருக்கிறது எனவும் விமர்சித்து உள்ளனர். இந்த விமர்சனங்கள் குறித்து கருத்து பதிவு செய்து இருக்கும் கேட் மற்றும் இஸ்ஸி ஆகிய இருவரும் பொதுவாக தடகள வீரர்களுக்கு அவர்கள் செய்யும் பயிற்சி காரணமாக பெரிய தோள்பட்டைகள் இருப்பது இயல்பு. கூடவே ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் நீச்சல் பயிற்சி செய்கிறோம். அதனால் எங்களுடைய உடல்வாகு இப்படி இருக்கிறது. இதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம தவிர வெட்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும் இதுபோன்ற விமர்சனங்களைப் பார்த்து “எந்தப் பெண்ணும் வெட்கப்படவோ, வேதனைப்படவோ கூடாது“ எனவும் அவர்கள் நம்பிக்கை அளித்து உள்ளனர். அதோடு இன்று நாங்கள் இருக்கும் நிலைக்கு பெருமைப்படுகிறோம். எங்கள் உடல்வாகு குறித்து நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் எனக் கூறியிருக்கும் கேட் மற்றும் இஸ்ஸி ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com