பாட்டிலில் அடைத்து காற்று விற்பனை… 500 ml இன் விலை எவ்வளவு தெரியுமா???
- IndiaGlitz, [Thursday,December 24 2020]
இங்கிலாந்து நாட்டில் கொரோனா கால பாதுகாப்பை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று சுவாசிக்கும் காற்றை பாட்டிலில் வைத்து அடைத்து விற்பனை செய்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது புதிய வகை கொரோனா பரவல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று காற்று விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. காரணம் கொரோனா பரவல் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். இதனால் மூச்சுத்திணறல் போன்ற குறைபாடு உடையவர்களுக்கு போதுமான காற்று சரியாக கிடைப்பதில்லை.
இந்நிலைமையை கவனத்தில் எடுத்துக்கொண்ட அந்நிறுவனம் My Baggage எனும் பெயரில் காற்று விற்பனை படு ஜோராக நடத்தி வருகிறது. இந்த ஏற்பாட்டிற்கு இங்கிலாந்து அரசாங்கமும் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது. இதனால் இங்கிலாந்தில் ஆரம்பித்த காற்று விற்பனை தற்போது அந்நாட்டின் வேல்ஸ், அதோடு வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் விற்பனைக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
500 மில்லி லிட்டர் கொண்ட ஒரு காற்று பாட்டிலின் விலை 33 டாலர் இந்திய மதிப்பில் ரூ.2,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தேவைப்படும்போது பாட்டிலை திறந்து சுவாசித்து விட்டு மீண்டும் மூடி வைத்து பயன்படுத்தும் முறையில் இந்த பாட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. முன்னதாக சுத்த காற்று விற்பனை செய்யும் இடங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. தேவைப்படுவோர் அந்த இடத்திற்கு சென்று பணத்தைச் செலவழித்து காற்றை சுவாசித்துவிட்டு வரலாம். ஆனால் கொரோனா இதற்கு தடையாக இருப்பதால் தற்போது பாட்டிலில் அடைத்து வைத்து காற்று விற்பனைக்கு வந்து இருக்கிறது.