இனவெறிக்கு பதிலடி… 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக் குவித்த இந்தியர்!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

சாலையில் செல்லும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பார்த்துவிட்டாலே பலரும் துள்ளிக்குதித்து ஆச்சர்யத்தில் மிதந்து வருகிறோம். காரணம் அதனுடைய விலை அப்படி. இப்படியிருக்கும்போது நம்முடைய இந்தியர் ஒருவர் தன்னை இகழ்ச்சியாக பேசிவிட்டாரே என்ற ஒரே காரணத்திற்காக 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக் குவித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவைச் சேர்ந்தவர் ரூபன் சிங். சிறிய வயதிலேயே தொழில் துவங்கிய இவர் தன்னுடைய 22 ஆவது வயதில் தன்னுடைய நிறுவனத்தை பெரும் விலைக்கு விற்று உலக அளவில் பிரபலமானார். தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் இவர் பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அவற்றில் ஒன்றுதான் இங்கிலாந்தைச் சேர்ந்த AlldayPa 2.

ரூப்ன் சிங் ஒரு தொழில் துறையில் மட்டுமல்ல தீவிர கார் பிரியரும் கூட. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வர்ங்கி அதன் அருகில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து அதைத் தன்னுடைய சோஷியல் மீடியாவில் வெளியிடுகிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ஆங்கிலேயர் ஒருவர், இதென்ன தலையில் மிகப்பெரிய பேண்டேஜை ஒட்டியிருக்கிறார் என்று ரூபன் சிங்கின் டர்பனை பார்த்து கிண்டலடித்துள்ளார்.

இதனால் மனம் நொந்துபோன ரூபன் சிங் ரோல்ஸ் ராய்ஸ் கார்களாக வாங்கிக் குவிக்கத் துவங்கிவிட்டார். மேலும் தன்னுடைய டர்பன் நிறத்திற்கு ஏற்ப கார்களை வாங்கி அதற்கு அருகில் இருந்து புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி Festival of Lights collection என்ற பெயரில் எஸ்வியூ ரகத்தைச் சேர்ந்த 2 கல்லினன் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார். ஏற்கனவே 3 கல்லினன் வகை கார்களை வைத்துள்ள அவருடைய பட்டியலில் தற்போது 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கிறதாம். இதைத்தவிர Bugatti, Porche, Pagani, Lamborghini, Ferrari போன்ற கார்களையும் அவர் வைத்திருக்கிறார்.

இப்படி தன்மீது விழுந்த இனவெறி தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக ரூபன் சிங் செய்துவரும் இந்த விஷயம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.