விஜய்யின் 'பிகில்' பிசினஸ் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Monday,June 24 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலையுடன் முடிக்க படக்குழுவினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஒருபக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற முன்னணி நிறுவனங்கள் கடும்போட்டியில் உள்ளன. 'தெறி', 'மெர்சல்' என இரண்டு வெற்றிக்கு பின் மீண்டும் விஜய்-அட்லி கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் வியாபாரம் பிரமாண்டமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பிகில்' படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை ஒன்றுக்கு 'யுனைட்டெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் X ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்த நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

More News

ஜோதிகாவின் 'ராட்சசி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த டிரைலரில் ஒரு அரசு பள்ளியின் அவலத்தையும் அந்த அரசுப்பள்ளியை ஒரு பொறுப்புள்ள

'அசுரன்' படத்தின் அட்டகாசமான அப்டேட் அளித்த ஜிவி பிரகாஷ்

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த பிசி ஸ்ரீராம்!

கடந்த ஆண்டு நடிகையர் திலகம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சீமராஜா', 'சர்கார்', 'சாமி2', சண்டக்கோழி 2' போன்ற படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிப்பில் ஒரு இந்தி படத்தில்

பேச்சுரிமை என்றாலும் அதற்கும் வரம்பில்லையா? ரஞ்சித்துக்கு நீதிபதி கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், 'ராஜராஜ சோழன்'

கைதட்டியது தவறா? முதல்நாளில் மோதிக்கொண்ட சேரன் - பாத்திமா பாபு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரச்சனையின்றி, கருத்துவேறுபாடின்றி செல்லும் வரை சுவாரஸ்யம் இருக்காது. எப்போது மோதல் தொடங்குகிறதோ