இவாங்கா டிரம்புக்கு ஆதார் அட்டை? பொறுப்புடன் பதில் அளித்த UIDAI அலுவலகம்
- IndiaGlitz, [Saturday,December 02 2017]
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவாங்காவின் வருகை குறித்து ஜோஸ் கோவாகோ என்பவர் 'இந்தியாவுக்கு இவாங்கா டிரம்ப் வந்தது எதற்காக எனில், அவர் இந்தியாவில் ஆதார் அட்டையை வாங்கவே வந்துள்ளார்' என்று ஒரு பதிவை காமெடிக்காக தனது டுவிட்டரில் கூறி, இவாங்காவின் வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.
ஆனால் இதற்கு பொறுப்புடன் UIDAI அலுவலகம் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளது. இவாங்கா ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை. மேலும் அவர் இந்திய குடிமகளும் இல்லை என்று கூறியிருந்தது.
இதற்கு ஒருவர் கமெண்ட் அளிக்கையில் ஆதார் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் 182 நாள் தங்கியிருந்தால் ஆதார் கிடைக்கும். இவாங்கா டிரம்ப் 182 நாட்கள் தங்கினால் ஆதார் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.