உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உள்பட 11 பேர் குற்றவாளி. பரபரப்பு தீர்ப்பு
- IndiaGlitz, [Tuesday,December 12 2017]
தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரும் குற்றவாளி என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை சற்றுமுன் வழங்கியுள்ளது.
இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளதை அடுத்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்பட குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்
மேலும் தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழகமே பரபரப்புடன் எதிர்பார்த்த இந்த தீர்ப்பில் 11 பேர் குற்றவாளி என்று கூறப்பட்டிருந்தாலும் தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குற்றவாளி தரப்பிலும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
'முழு தீர்ப்பு வந்தபின் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் என்று சங்கரின் மனைவி கவுசல்யா தெரிவித்தார்