உடுமலை கவுசல்யா மறுமணம்: இசைக்கலைஞரை மணந்தார்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய ஆணவக்கொலை சம்பவம் உடுமலையில் சங்கர் என்ற இளைஞர் கெளரவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்த கொலை வழக்கில் சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட ஆறு பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கவுசல்யா சற்றுமுன் மறுமணம் செய்துள்ளார். நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தி என்பவரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தை த.பெ.தி.க தலைவர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது
மறைந்த தனது சங்கரின் பெயரில் அறக்கட்டளை தொடங்கிய கவுசல்யா நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி என்பவருடன் இணைந்து சமூக செயல்பாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவுசல்யாவை திருமணம் செய்து கொண்ட சக்தி, ஒரு பறை இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com