உதயநிதி படத்திற்கு கமல்ஹாசன் பட பாடலின் டைட்டில்

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இந்த படத்தில் உதயநிதி ஒரு விவசாயியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முதல்முறையாக இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடி சேருகிறார் நடிகை தமன்னா. ஏற்கனவே சீனுராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த 'தர்மதுரை' படத்தில் மனதை உருக்கும் வேடத்தில் நடித்த தமன்னாவுக்கு இந்த படத்திலும் வெயிட்டான கேரக்டரை தேர்வு செய்திருப்பார் என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'கண்ணே கலைமானே' என்ற டைடிட்டில் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய 'மூன்றாம் பிறை' படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல் வரியே இந்த படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளது ஒரு சிறப்பாக கருதப்படுகிறது.

குடும்ப செண்டிமெண்ட் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 19 முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரம், சூர்யாவுடன் இணைந்தார் அரவிந்தசாமி

வரும் பொங்கல் தினத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது. மேலும் சண்முகப்பாண்டியனின் 'மதுரவீரன்' படமும்

சச்சினிடம் வாழ்த்து பெற்ற இரண்டு பெண்கள் யார் தெரியுமா?

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வரும் சச்சின் தெண்டுல்கர், திறமை யாரிடம் இருந்தாலும் அதை பாராட்ட தயங்காதவர். குறிப்பாக பெண்கள் சாதனை செய்யும் போது

எத்தனை முறை கேட்டாலும் அஜித்தான் எனக்கு பிடித்த நடிகர்: ப்ரியா பவானிசங்கர்

'மேயாத மான்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானிசங்கர். இந்த படத்தின் வெற்றியால் தற்போது இவர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நாயகியாக

உதயநிதிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்யும் உதவி

நடிகர் உதயநிதி நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'நிமிர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும்

நடிகை பாவனாவின் திருமண தேதி எது தெரியுமா?

நடிகை பாவனாவுக்கும், பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் டிசம்பர் 22ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் எளிமையாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது