விஜய்-அஜித் படங்களை தயாரிப்பது எப்போது? உதயநிதி

  • IndiaGlitz, [Monday,April 11 2016]
விஜய் நடித்த 'குருவி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தயாரிப்பாளராக மட்டுமின்றி வெற்றிகரமான ஹீரோவாகவும் மாறிவிட்டார். இந்நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து எப்போது படமெடுப்பார் என்று ஆவலுடன் அனைவரும் காத்திருக்கும் நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், விஜய் சார் எப்போது தேதி கொடுக்கின்றாரோ அப்போது அவரை வைத்து படமெடுக்க தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தை வைத்து எப்போது படம் தயாரிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி 'அஜித்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் அஜித்துடன் பேசி வருகிறார். அஜித் சார்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது 'மனிதன்' படத்தை முடித்துவிட்டார். மேலும் இன்று அவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜையும் சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தெறி' : பரபரப்பை ஏற்படுத்திய 15 நொடி புரமோ வீடியோ

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாட்கணக்கில் இருந்த நிலையில் தற்போது மணிக்கணக்கில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது...

விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. வேஷ்டி-சட்டையில் அசத்திய விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ்...

'விசாரணை'க்கு கிடைத்த மேலும் ஒரு விருது

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளை ...

வெங்கட்பிரபுவின் 2வது இன்னிங்ஸ் இன்று ஆரம்பம்

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் சம்பந்தமான திரைப்படமான 'சென்னை 28'...

'24' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்த '24' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சற்று முன் நடந்தது...