ரஜினியின் '2.0' படத்துடன் கனெக்ஷன் ஆன உதயநிதி

  • IndiaGlitz, [Tuesday,June 21 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும் இதே நிறுவனம் தயாரித்த ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர்' இருக்கு படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில் ரஜினி, ஜி.வி.பிரகாஷை அடுத்து உதயநிதி நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இந்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கவுரவ் நாராயணன் ஏற்கனவே விக்ரம் பிரபு, சத்யராஜ், நடித்த 'சிகரம் தொடு' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சொந்த நிறுவனத்தின் படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி 'மனிதன்' பட வெற்றியை அடுத்து வேறு நிறுவனங்களின் படத்திலும் நடிக்கவுள்ளார். ஏற்கனவே அவர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்தியின் 'காஷ்மோரா' ரிலீஸ் தேதி?

கார்த்தி நடித்து வந்த 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள்...

விக்னேஷ் சிவன் பிரிவு குறித்து உறுதி செய்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் 'நானும் ரெளடிதான்' இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில மாதங்களாக காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில்...

ரஜினி சென்னை திரும்பும் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கடந்த வாரம் ஒரு வதந்தி கிளம்பியது என்பதையும் அந்த வதந்திக்கு ரஜினியின் குடும்பத்தினர்...

3 நாட்கள் தொடர்ந்து வெளியாகும் செல்வராகவன் பட ஃபர்ஸ்ட்லுக்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பேய்ப்படங்கள் வந்த நிலையில் தற்போது பேய்ப்படங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது...

பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா விஜய்?

ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாள் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சென்னை களைகட்டிவிடும்...