ரஜினியின் '2.0' படத்துடன் கனெக்ஷன் ஆன உதயநிதி

  • IndiaGlitz, [Tuesday,June 21 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும் இதே நிறுவனம் தயாரித்த ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர்' இருக்கு படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில் ரஜினி, ஜி.வி.பிரகாஷை அடுத்து உதயநிதி நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இந்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கவுரவ் நாராயணன் ஏற்கனவே விக்ரம் பிரபு, சத்யராஜ், நடித்த 'சிகரம் தொடு' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சொந்த நிறுவனத்தின் படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி 'மனிதன்' பட வெற்றியை அடுத்து வேறு நிறுவனங்களின் படத்திலும் நடிக்கவுள்ளார். ஏற்கனவே அவர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.