அஜித், விஜய் இயக்குனரின் அடுத்த படத்தில் உதயநிதி

  • IndiaGlitz, [Wednesday,June 29 2016]

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அஜித், விஜய் உள்பட பிரபல நடிகர்களை இயக்கிய எழில் இயக்கத்தில் உதயநிதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் விஷ்ணு நடிப்பில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற ஹிட் படத்தை இயக்கிய எழில், உதயநிதி நடிக்கும் படத்தை இயக்க இறுதி செய்துவிட்டதாகவும், இந்த படத்தை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.