உதயநிதியின் 'கெத்து'க்கு முற்றுப்புள்ளி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருகல் ஒரு கண்ணாடி', 'நண்பேண்டா', 'இது கதிர்வேலன் காதலன்' ஆகிய படங்களின் நாயகனும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தருமான உதயநிதி ஸ்டாலின், 'கெத்து' என்ற படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் உதயநிதியுடன் எமிஜாக்சன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ் மற்றும் கருணாகரன் ஆகியோர்களும் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஆகியோர் ஒளிப்பதிவாராகவும் ராஜமோகன் படத்தொகுப்பாளரும் பணிபுரிந்துள்ளனர்.
'கெத்து' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததை அடுத்து உதயநிதி, 'ஜாலி எல்.எல்.பி என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அஹ்மத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் மீண்டும் உதயநிதியுடன் ஹன்சிகா இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ் மற்றும் ராதாரவி ஆகியோர்களும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments