close
Choose your channels

உதயநிதியுடன் ஜோடி சேர்ந்த சிம்பு நாயகி

Wednesday, July 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்நிலையில் ஏற்கனவே அவர் இயக்குனர் கவுரவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுரவ் இயக்கும் படத்தில் தற்போது உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஏற்கனவே மஞ்சிமா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை இயக்குனர் கவுரவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று உறுதி செய்துள்ளார். திகில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் உதயநிதி, மஞ்சிமா இருவருக்குமே வித்தியாசமான வேடங்கள் என்று கூறிய கவுரவ், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்து அந்த செய்தியை மஞ்சிமா மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment