சூர்யா-விஷால்-ஜெயம் ரவியுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்

  • IndiaGlitz, [Thursday,December 17 2015]

வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் சூர்யாவின் 'பசங்க 2', வெற்றிமாறனின் 'வில அம்பு', விமல் நடித்த 'அஞ்சல' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. மேலும் நீண்ட நாள் கிடப்பில் இருந்த ஜெயம் ரவியின் 'பூலோகம்' மற்றும் விஷாலின் 'மதகஜ ராஜா' ஆகிய திரைப்படங்களும் இதே நாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் கிறிஸ்துமஸ் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' படமும் தற்போது இணைந்துள்ளது. ஆனால் இந்த நாளில் 'கெத்து' படத்தின் பாடல்கள் மட்டும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதியின் 'ஓருகல் ஒருகண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய படங்களை போலவே ஹாரீஸ் - உதயநிதி இணைந்துள்ள இந்த படத்தின் பாடலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக முதன்முதலாக எமி ஜாக்சன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக விக்ராந்த், உதயநிதியின் தந்தையாக சத்யராஜ் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடத்தில் கருணாகரன் நடிக்கும் இந்த படத்தை திருக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.