யோகிபாபு வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட உதயநிதி-சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

நடிகர் யோகி பாபு வீட்டில் நடந்த முக்கிய விசேஷம் ஒன்றில் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதியின் குழந்தைக்கு விசாகன் என்று பெயர் வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யோகி பாபு குழந்தையின் பிறந்த நாள் விழா தற்போது கொண்டாடப்பட்டது. யோகிபாபுவின் திருமணம் ஊரடங்கின்போது நடந்ததால் அவரால் திரையுலக பிரபலங்களை அழைக்க முடியவில்லை. அதனை அடுத்து தற்போது தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை அடுத்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து யோகிபாபுவின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், பாக்யராஜ், பூர்ணிமா ஜெயராம் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு யோகிபாபுவின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிறந்தநாள் கேக் வெட்டும் வரை உடனிருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

src=hash&ref_src=twsrc%5Etfw>#YogiBabu pic.twitter.com/McAnMRX2oV

— Actor Kayal Devaraj (@kayaldevaraj) December 27, 2021