உதயநிதியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 14 2016]

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன், சத்யராஜ் நடிப்பில் திருக்குமரன் இயக்கிய 'கெத்து' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் அடுத்த படத்திற்கு 'மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட் ஆன 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதன்' என்ற டைட்டிலில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலினுடன் ஹன்சிகா நடிக்கவிருப்பதாக கூறப்படும் இந்த படத்தை 'என்றென்றும் புன்னகை' அஹ்மத் இயக்கி வருகிறார். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.

இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

'ரஜினிமுருகன்' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் என்.லிங்குசாமி தயாரித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் பல்வேறு ஃபைனான்ஸ் பிரச்சனைகளை கடந்து நாளை முதல் வெற்றிகரமாக பெருவாரியான...

கமல்ஹாசனுக்கு கிடைக்கவுள்ள அடுத்த மரியாதை

உலக நாயகன் கமல்ஹாசன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்திய அளவிலும், உலக அளவிலும் மதிக்கத்தக்க ஒரு நபராக கருதப்படுபவர்...

கமல் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டபோதிலும் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை...

'அச்சம் என்பது மடமையடா' சர்ப்பரைஸ் வீடியோ ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது....

உதயநிதியுடன் இணையும் பாப்புலர் ஹீரோ

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள 'கெத்து' திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் உதயநிதி அடுத்ததாக 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் ஏ.கே.அஹ்மத் இயக்கத்தில்...