உதயநிதியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 14 2016]

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன், சத்யராஜ் நடிப்பில் திருக்குமரன் இயக்கிய 'கெத்து' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் அடுத்த படத்திற்கு 'மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட் ஆன 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதன்' என்ற டைட்டிலில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலினுடன் ஹன்சிகா நடிக்கவிருப்பதாக கூறப்படும் இந்த படத்தை 'என்றென்றும் புன்னகை' அஹ்மத் இயக்கி வருகிறார். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.

இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.