எய்ம்ஸ் செங்கலை தந்தையிடம் ஒப்படைத்த உதயநிதி!
- IndiaGlitz, [Sunday,May 02 2021]
திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலை ஒப்படைத்த புகைப்படம் உதயநிதியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஒரு செங்கலை தூக்கி உதயநிதி ஸ்டாலின் காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் கட்டப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை உதயநிதி ஸ்டாலின் திருடி விட்டார் என்று கூட பாஜகவினர் அவர் மீது புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய செங்கலை தனது தந்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இடம் ஒப்படைத்த புகைப்படத்தை அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த டிவீட்டில் திமுக வெற்றி பெற்று விட்டதாகவும் திமுக ஆட்சி வரப்போகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் மு ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவி ஏற்றதும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து நடவடிக்கை எடுப்பார் என்பதை குறிக்கும் வகையில் இந்த புகைப்படம் இருப்பதாக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#DMKwinsTN #AIIMS #TNwithDMK pic.twitter.com/da6aF5k6qW
— Udhay (@Udhaystalin) May 2, 2021