உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக இளைஞரணி செயலளாரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரனும் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அதோடு நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக சென்னை சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏ பதவிக்கும் போட்டியிட்டார். இந்நிலையில் “கண்ணை நம்பாதே”, “ஏஞ்சல்”, ரீமேக் படமான “ஆர்ட்டிகள் 15” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது மனைவி கிருத்திகா. தமிழ் சினிமாவில் முக்கியத்துவமுள்ள ஒரு பெண் இயக்குநராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் “வணக்கம் சென்னை”, “காளி” போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இத்தம்பதிக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர். தற்போது தனது மகன் இன்பநிதியுடன் ஒரு நண்பனை போல் தோள் மேல் கைப்போட்டு உதயநிதி எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத்தான் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments