கால்பந்தில் கலக்கும் முதல்வர் ஸ்டாலின் பேரன்: எந்த அணியில் இடம்பெற்றார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்களின் வாரிசு முக ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக முதல்வராக இருந்து வருகிறார் என்பதும், முக ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதல்வராக வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி அரசியலில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் கவனம் செலுத்தியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்திய லீக் கால்பந்து போட்டியில் 21 கிளப் அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் மணிப்பூர் மாநில அணியான நிரோகா என்ற அணியில் விளையாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் பேரன் இன்பநிதி தேர்வாகியுள்ளார். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிப்பூரின் நிரோகா அணி உள்பட பல அணிகள் விளையாடும் இந்தியன் லீக் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து இன்பநிதி இன்று வெளிநாடு சென்றார். அவரை வழியனுப்ப முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். கால்பந்தில் கவனம் செலுத்தி வரும் இன்பநிதி அதில் சாதனை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments