பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜய்.. அமைச்சர் உதயநிதி கூறிய கமெண்ட்..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

நேற்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரியார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறிய கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், நேற்று பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, தந்தை பெரியாருக்கும் வாழ்த்து கூறி பதிவிட்டார். அதுமட்டுமின்றி, பெரியார் நினைவிடத்திற்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, விஜய் திராவிடப் பாதையில் செல்லப்போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் உதயநிதி, யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள், என்றார்.

மேலும், துணை முதலமைச்சருக்கான கேள்விக்கு, எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகவே உள்ளனர். எந்த முடிவாக இருந்தாலும், அதை முதலமைச்சர் மட்டுமே எடுப்பார். அவருடைய முடிவு தான் முழுமையான முடிவு என்றும் கூறினார்.

More News

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம்: கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டு..!

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லாரியை பல கிமீ துரத்தி பிடித்த பிரபல நடிகை: சினிமா பாணியில் ஒரு நிஜ சேஸிங்!

சினிமா பாணியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பிரபல நடிகை ஒருவர் தனது காரில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்: விமல் நடித்த 'சார்' டிரைலர்..!

விமல் நடித்த "சார்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விஜய் தவறான பாதையில் செல்கிறார்: பிரபல இயக்குனர்

நடிகர் விஜய் தவறான பாதையில் செல்வதாகவும் அதனால் வருத்தமாக இருப்பதாகவும் பிரபல இயக்குனர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தங்களை பரிமாறிய நயன் - விக்கி.. என்ன விசேஷம்? ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் முத்தங்களை பரிமாறிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. இருவருக்கும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.