படம் பார்த்த பிறகு டைட்டில் சரிதான்னு தோணுச்சு: 'கலகத்தலைவன்' குறித்து உதயநிதி

  • IndiaGlitz, [Thursday,November 17 2022]

உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகத்தலைவன்’ திரைப்படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் தான் பலரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு மிக பொருத்தமான டைட்டில் என்பது மட்டுமின்றி கதைக்கு மிக பொருத்தமான டைட்டில் என்பதால் தான் இந்த டைட்டிலை தேர்வு செய்தேன் என மகிழ்திருமேனி பல பேட்டிகளில் கூறி உள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த உதயநிதி கூறியபோது ’இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே என்ன டைட்டில் வைத்திருக்கிறீர்கள்? என்று மகிழ்திருமேனியிடம் கேட்டேன். அவர் ‘கலகத்தலைவன்’ என டைட்டிலை கூறிய பிறகு நான் சிறிது யோசித்தேன். ஆனால் மகிழ்திருமேனி இந்த கதைக்கு இந்த டைட்டில் தான் சரியாக இருக்கும் என்று பிடிவாதமாக இருந்ததால் அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகுதான் எனக்கு இந்த டைட்டில் மிகவும் சரியானது என்பதை தோன்றியது என கூறினார்.

மேலும் ‘கலகத்தலைவன்’ எப்போது கழகதலைவர் ஆவார் என்ற கேட்ட கேள்விக்கு பதில் கூறிய உதயநிதி, ‘அதற்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது என்றும் தற்போது தான் நான் சில ஆண்டுகளாக இளைஞரணி செயலாளராக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கட்சியில அப்படி திடீர்னு யாரையும் நியமிக்க முடியாது என்றும், அதற்கென தேர்தல் இருக்கு என்றும், அதுமட்டுமின்றி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதுக்கு இன்னும் நிறைய தயார்படுத்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும், ஆனால் அது என் இலக்கு கிடையாது என்றும் கூறினார்.