இந்தியன்-2 பணிகள் தொடங்குவது எப்போது? உதயநிதி கொடுத்த சூப்பர் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,June 07 2022]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவலை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து கமல் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவாகி அதன் பின் திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட ’இந்தியன் 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், தான் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அவர்களிடம் பேசியதாகவும் அப்போது ’இந்தியன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக கூறினார் என்றும், அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் 'ஆர்.சி.15’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த படத்தை முடித்தவுடன் அவர் ‘இந்தியன் 2’ படத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

விக்ரம் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு ’இந்தியன் 2’ திரைப்படம் வெளியாக இருப்பதால் அந்த படமும் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வங்கக்கடல் பின்னணி, கண்ணாடியில் செட்: விக்கி-நயன் திருமணம் குறித்த ஆச்சரிய தகவல்கள்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் ஜூன் 9ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் திருமணம் செய்ய உள்ளனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட

'டான்' நான் நடிக்க வேண்டிய படம், நல்லவேளை நான் பண்ணலை: உதயநிதியின் ஆச்சரிய தகவல்

 சிவகார்த்திகேயன் நடித்த 'டான்'  திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன்

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கார்த்தி சொன்னது என்ன தெரியுமா?

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

லைப் டைம் செட்டில்மெண்ட்: கமல் கடிதம் குறித்து நெகிழ்ச்சியுடன் லோகேஷ்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும்

'எந்த ஒரு தாயும் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டா: நயன்தாராவின் 'O2' டிரைலர்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த 'O2' திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.