ஜிவி பிரகாஷ் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த உதயநிதி: என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 30 2022]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் சிறப்புக் காட்சியை நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஜிவி பிரகாஷ், காயத்ரி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’இடிமுழக்கம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை உதயநிதியை பார்த்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ‘இடிமுழக்கம்’ சிறப்புக்காட்சி பார்த்த அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படம் மிக நன்றாக வந்திருப்பதாக பாராட்டி ஊக்குவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வேலை பழு இடையிலும் நேரம் ஒதுக்கி பார்த்தமைக்கு படக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

அதேபோல் இடிமுழக்கம் சிறப்பு காட்சியை பார்த்ததை அறிந்த சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில், ‘அன்பும் அன்பென்ற நன்றியும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு’ என்று கூறியுள்ளார்.