விஜய் என்ன சொன்னாலும் அவங்களுக்கு பிடிக்காது: உதயநிதி ஸ்டாலின் 

  • IndiaGlitz, [Sunday,September 22 2019]

பேனர் கலாச்சாரம் குறித்தும், சுபஸ்ரீ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த ‘பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் பேசியது தமிழக அரசியல்வாதிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பை கண்டுகொள்ளாமல் விஜய், ஓய்வு எடுக்க வெளிநாடு சென்றுவிட்டாலும், அவர் சொன்ன கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் பல அரசியல்வாதிகள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாலருமான உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கூறியதாவது:

நண்பர் விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது. அவர் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போய்விடுவார். இவர்கள் பாவம் புலம்புகின்றனர். விஜய் எதுவும் தவறாக கூறியதாக எனக்கு தோன்றவில்லை. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் லாரி டிரைவரை கைது செய்து, பிரிண்டிங் பிரஸ்ஸை மூடினால் மட்டும் போதாது, உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விஜய் கூறினார். விஜய்யின் இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.

மேலும் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம் என்றும், எங்கள் தலைவரும் மூன்று வருடமாக இதையேதான் கூறி வருகிறார் என்றும், கடந்த சில நாட்களாக இளைஞரணி சார்பில் நடைபெற்ற எந்த விழாவிலும் பேனர்கள் வைக்கப்படவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

More News

இணையத்தில் வைரலான மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளிக்கும் டி.இமான்

இணையதளங்களில் ஒரு சில மோசமான விஷயங்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக ஒருவரது திறமையை ஒரே நாளில் உலகமே அறியும் வகையில்

லாஸ்லியா பதிலை கலாய்த்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முகின் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற நிலையில் இன்று யாரை தக்க வைப்பது, யார் வெளியேறுவது என்பதை கமல் அறிவிக்கவுள்ளார்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஐடி பெண் ஊழியர் மரணம் அடைந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்

சென்னை அம்பத்தூரில் ஹெச்.ஆர். பணியில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே தனிதா ஜூலியஸ் என்ற இளம்பெண் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

அஜித்தின் 'விவேகம்' தயாரிப்பாளர் மீது மோசடி புகார்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்சராஹாசன் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விவேகம்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகியது.

'கோமாளி' வெற்றிப்பட நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிய 'கோமாளி' திரைப்படம்