விஜய் என்ன சொன்னாலும் அவங்களுக்கு பிடிக்காது: உதயநிதி ஸ்டாலின்
Send us your feedback to audioarticles@vaarta.com
பேனர் கலாச்சாரம் குறித்தும், சுபஸ்ரீ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த ‘பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் பேசியது தமிழக அரசியல்வாதிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பை கண்டுகொள்ளாமல் விஜய், ஓய்வு எடுக்க வெளிநாடு சென்றுவிட்டாலும், அவர் சொன்ன கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் பல அரசியல்வாதிகள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாலருமான உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கூறியதாவது:
நண்பர் விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது. அவர் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போய்விடுவார். இவர்கள் பாவம் புலம்புகின்றனர். விஜய் எதுவும் தவறாக கூறியதாக எனக்கு தோன்றவில்லை. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் லாரி டிரைவரை கைது செய்து, பிரிண்டிங் பிரஸ்ஸை மூடினால் மட்டும் போதாது, உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விஜய் கூறினார். விஜய்யின் இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.
மேலும் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம் என்றும், எங்கள் தலைவரும் மூன்று வருடமாக இதையேதான் கூறி வருகிறார் என்றும், கடந்த சில நாட்களாக இளைஞரணி சார்பில் நடைபெற்ற எந்த விழாவிலும் பேனர்கள் வைக்கப்படவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout