போஸ்டர்களை கிழிக்கிறது என்னோட வேலையில்லை: உதயநிதி
- IndiaGlitz, [Wednesday,December 26 2018]
திமுகவினர் என்னை முன்னிலை படுத்தி போஸ்டர் அடிப்பதற்கு நான் பொறுப்பாக முடியாது. அவ்வாறு அடிக்கும் போஸ்டர்களை கிழிப்பது என்னோட வேலையில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி தன்னுடைய படங்கள், விரைவில் வெளியாகவுள்ள 'கண்ணே கலைமானே' படங்கள் குறித்து தனது அரசியல் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
நான் என்றைக்குமே என்னை முன்னிலைப்படுத்தி போஸ்டர் அடிக்க கூறியதே இல்லை. ஒருசிலர் அன்பு மிகுதியால் அவ்வாறு போஸ்டர் அடித்து விடுகின்றனர். அதற்கு நான் பொறுப்பேற்கவும் முடியாது, அந்த போஸ்டர்களை தேடிப்பிடித்து என்னால் கிழித்து கொண்டிருக்கவும் முடியாது என்று கூறினார்.
மேலும் 'கண்ணே கலைமானே' படத்தில் தான் ஒரு ஆர்கானிக் விவசாயியாக நடித்துள்ளதாகவும் படம் முழுவதும் தனக்கு வேஷ்டி-சட்டைதான் காஸ்ட்யூம் என்றும் கூறிய உதயநிதி, இந்த படத்தில் தமன்னா ஒரு கூட்டுறவு வங்கி அதிகாரியாக நடித்துள்ளார் என்றும், ஒரு விவசாயிக்கும் வங்கி அதிகாரிக்கும் இடையிலான ஒரு மெல்லிய காதல் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் தான் கிளிசரின் துணையின்றி அழுது நடித்ததாகவும், அதற்கு இயக்குனர் சீனுராமசாமி அவர்களே காரணம் என்றும் தெரிவித்தார்.
மேலும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் வெற்றி பெற்றவுடன் தனக்கு காமெடி படங்கள் மட்டுமே செட் ஆகும் என நினைத்ததாகவும், ஆனால் 'மனிதன்' படத்தின் வெற்றி தன்னை அனைத்து கேக்ரடர்களிலும் நடிக்க உந்துதலாக இருந்தது என்றும் கூறினார்.