கர்ணன் திரைப்படம்- அதிருப்தி குரலுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி ஸ்டாலின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி தற்போது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் “கர்ணன்”. இத்திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை பதிவு செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்பி வருகிறது. எனினும் இந்தப் படம் அரசியல் ரீதியாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
காரணம் இந்தத் திரைப்படத்தில் குறியீடாகக் காட்டப்பட்டு இருக்கும் கொடியன்குளம் சம்பவம் கடந்த 1997 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்றதாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்தச் சம்பவம் உண்மையில் 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற ஒரு வன்முறைச் சம்பவம். எனவே இந்தப் படத்தில் வரலாறு தவறாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பது போன்ற விமர்சனங்களும் எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தன.
அதேபோல திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கர்ணன் திரைப்படத்தைக் குறித்து தனது டிவிட்டர் பதிவில், “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997 இல் கழக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர் இயக்குநரிடம் சுட்டிக் காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரி செய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர்” என்று நேற்று பதிவிட்டு இருந்தார்.
அதையடுத்து கர்ணன் படக்குழு, திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் வரலாற்று சம்பவங்களை 90 களின் பிற்பகுதியில் நடைபெற்ற சம்பவம் எனத் திருத்தி இருக்கிறது. எனினும் 90 களின் பிற்பகுதி எனச் சுட்டப்பட்டப் பிறகும் கர்ணன் திரைப்படத்திற்கு தொடர்ந்து அதிருப்தி குரல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், இந்தச் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 1995 – இல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997 இல் நடந்ததாக காட்டப்பட்டு இருப்பதை தயாரிப்பாளர் இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக் கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக் காட்டுகையில் அதை திருத்திக் கொள்வது வரவேறபுக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995 இல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் 90 களின் இறுதியில் எனத் திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தப் பதிவை அடுத்து கர்ணன் திரைப்படத்தின் மீது வைக்கப்பட்டு வரும் விமர்சனக் குரல்கள் முற்றுப்பெறும் எனவும் நம்பப்படுகிறது.
‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் @dhanushkraja,அண்ணன் @theVcreations, இயக்குநர்@mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
— Udhay (@Udhaystalin) April 13, 2021
கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக...
Posted by Udhayanidhi Stalin on Wednesday, April 14, 2021Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com