உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி': டப்பிங் தொடங்கியது
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியது
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் அவர்களின் பேவியூ புரொஜக்ட் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த படத்தை ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலான நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியது.
உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
திபு நினன் இசையில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படதொகுப்பில் உருவாகி வரும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
#NENJUKKUNEEDHI Shooting Completed. Dubbing commenced. @Udhaystalin @Arunrajalsmraj @mynameisraahul @ZeeStudios_ @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial @AntonyLRuben @zeemusicsouth @DoneChannel1 @dineshkrishnanb @dhibuofficial @AntonyLRuben @zeemusicsouth pic.twitter.com/1cyL4Mob0n
— Boney Kapoor (@BoneyKapoor) December 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments